ஐசிஐசிஐ வங்கியில் ரூ.12 கோடி திருட்டு - 2 மாத தேடுதல் வேட்டைக்குப் பின் சிக்கிய காவலாளி

ஐசிஐசிஐ வங்கியில் ரூ.12 கோடி திருட்டு - 2 மாத தேடுதல் வேட்டைக்குப் பின் சிக்கிய காவலாளி
ஐசிஐசிஐ வங்கியில் ரூ.12 கோடி திருட்டு - 2 மாத தேடுதல் வேட்டைக்குப் பின் சிக்கிய காவலாளி

வங்கியில் ரூ.12 கோடி கொள்ளையடித்துவிட்டு தலைமறைவான பாதுகாவலர் தனது அடையாளம் தெரியாமல் இருக்க புர்கா அணிந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள மன்பாடா பகுதியில் ஐசிஐசிஐ வங்கி ஒன்று உள்ளது. இதில், வங்கி லாக்கர் சாவிகளின் பாதுகாவலர் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தவர் அல்தாஃப் ஷேக் (வயது 43). இவர் ஓராண்டாக வங்கியில் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளார். இதற்காக வங்கி குறித்த முழுமையான விபரங்களை பற்றி தெரிந்து வைத்துள்ளார். இதன்படி, கடந்த ஜூலை 12ஆம் தேதி வங்கியில் உள்ள ரூ.12 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது. எச்சரிக்கை செய்யும் அலாரம் மற்றும் சிசிடிவி காட்சிகளை செயல்படாமல் செய்துவிட்டு, பின்பு அல்தாஃப் ஷேக் கொள்ளை செயலில் இறங்கி உள்ளார். வங்கி லாக்கரைத் திறந்து பணத்தை எடுத்து ஏசி துளை வழியாக வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார்.


மறுநாள் வங்கி வழக்கம் போல இயங்கிய போதுதான், வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணம் காணாமல் போனது தெரிய வந்தது. அப்போது பாதுகாவலர் அல்தாஃப் ஷேக்  மாயமானதும் அவர் மீது சந்தேகம் திரும்பியது. விசாரணையில், அவரது சகோதரி வீட்டில் சிறிது பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சகோதரியும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தொடர்ந்து இரண்டரை மாத தேடுதல் வேட்டைக்குப் பின்னர், அல்தாஃப் ஷேக் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். அவருடன் நிலோபர், அப்ரார் குரேஷி (வயது 33), அகமது கான் (வயது 33) மற்றும் அனுஜ் கிரி (வயது 30) உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்திற்குப் பின் தப்பிய அல்தாஃப் ஷேக், அவ்வப்போது, தனது நடை, உடை மற்றும் முகபாவனைகளை மாற்றியுள்ளார். தனது அடையாளம் தெரியாமல் இருக்க புர்கா அணிந்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட ரூ.12 கோடியில் இதுவரை ரூ.9 கோடி வரை கைப்பற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள தொகையை விரைவில் பறிமுதல் செய்வோம் என மண்டப காவல் நிலைய அதிகாரி கூறியுள்ளார்.

இதையும் படிக்க: குழந்தை திருமணம்: சிதம்பரம் கோவில் தீட்சிதர் உட்பட 6 பேர் மீது வழக்கு – ஒருவர் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com