கோடாரியால் இருவர் வெட்டிக்கொலை... புதைகுழியில் மறைந்த குற்றவாளி... எதற்காக?

கொலையே ஒரு கொடூரம், அதிலும் சில கொலைகள் நம் ரத்தத்தை உறைய வைக்கும். இந்த மாதிரி நிகழும் சில கொலைகள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதுபோன்ற ஒரு கொலை மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்
குற்றம்சாட்டப்பட்டவர்ட்விட்டர்

மகாராஷ்டிராவில், பால்கர் மாவட்டத்தில் உள்ள போய்சர் பகுதியில் இருக்கிறது கூடன் என்ற கிராமம். இங்கு, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு மூத்த குடிமக்களை கோடரியால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர் கொடூரமாக இருவரை கொன்றுவிட்டு, அருகில் வனப்பகுதியில் உள்ள புதைகுழியில் இறங்கி இருக்கிறார். இவர் தற்கொலை செய்துக்கொள்வதற்காக இறங்கினாரா? அல்லது மனநலம் சரியில்லாததால் இறங்கினாரா அல்லது போலீசாருக்கு பயந்து தன்னை மறைத்துக்கொள்ள இறங்கினாரா என்று தெரியாத நிலையில், அவரை புதைகுழியிலிருந்து மீட்ட போலீசார், கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com