\
திருவள்ளூர்: தோசைக்கல்லால் அடித்து பாட்டியைக் கொன்ற பேரன்

திருவள்ளூர்: தோசைக்கல்லால் அடித்து பாட்டியைக் கொன்ற பேரன்

திருவள்ளூர்: தோசைக்கல்லால் அடித்து பாட்டியைக் கொன்ற பேரன்
Published on

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தோசைக் கல்லால் அடித்து பாட்டியை கொன்றுவிட்டு தலைமறைவான பேரனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பசுவன்பாளையத்தைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி சுசீலாவின் வீட்டுக்கு, சென்னை வானகரத்தைச் சேர்ந்த மகன்வழிப் பேரனான 30 வயது ஜெகன் வந்துள்ளார். மதுபோதையில் பாட்டியுடன் தகராறு செய்த ஜெகன், சுசீலாவின் தலையில் தோசைக்கல்லால் அடித்துள்ளார். இதில் சுசீலா உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், அங்கு சென்ற சோழவரம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தலைமறைவான ஜெகனை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com