கோவை: பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்டவர் அடித்துக்கொலை

கோவை: பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்டவர் அடித்துக்கொலை
கோவை: பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்டவர் அடித்துக்கொலை

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு உணவகத்தில் பரோட்டாவிற்கு கூடுதல் குருமா கேட்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துக்கவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். அவர் கருப்புசாமி என்பவரது உணவகத்தில் பரோட்டா பார்சல் வாங்கியுள்ளார். அப்போது, கூடுதலாக குருமா கேட்ட ஆரோக்கியராஜை, உணவக உரிமையாளர் கருப்புசாமி, பணியாளர்களான கரிகாலன், முத்து ஆகியோர் தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். வாக்குவாதம் முற்றி மூவரும் ஆரோக்கியராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் மயங்கி விழுந்தவரை, பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த ஆரோக்கிய ராஜ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருதரப்பு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதனால், முத்துக்கவுண்டன்புதூரில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கருப்புசாமிக்கும், ஆரோக்கிராஜுக்கும் முன்விரோதம் இருந்ததால், திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விசாரிக்க கருப்புசாமி மற்றும் கரிகாலனை காவல்துறையினர் கைது செய்தனர். தப்பியோட முயன்ற முத்துவை மக்கள் சரமாரியாக தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com