நண்பரின் மனைவியை தவறாக பேசிய இளைஞர்: தலையை வெட்டி கிணற்றில் வீசிய கும்பல்

நண்பரின் மனைவியை தவறாக பேசிய இளைஞர்: தலையை வெட்டி கிணற்றில் வீசிய கும்பல்

நண்பரின் மனைவியை தவறாக பேசிய இளைஞர்: தலையை வெட்டி கிணற்றில் வீசிய கும்பல்
Published on

நண்பரின் மனைவியை தவறாக பேசியதால் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப். இவர் ஒரகடம் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனதாக ஒரகடம் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட கண்காணிப்பாளர் பிரியா விசாரணை மேற்கொண்டதில், நண்பனின் மனைவி குறித்து பிரதாப் தவறாக பேசியதாகவும் அதனால் ஆத்திரமடைந்த பிரதாப்பின் நண்பர்கள் 3 பேர் பிரதாப்பின் தலையை வெட்டிக் கொலை செய்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றி பிரதாப்பின் உடல் மற்றும் தலையை மீட்டனர். பின்னர் அவற்றை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com