\
மனைவிக்கு தொடர்ந்து பாலியல்தொல்லை கொடுத்த தந்தை - கூலிப்படை வைத்து கொன்ற மகன்!

மனைவிக்கு தொடர்ந்து பாலியல்தொல்லை கொடுத்த தந்தை - கூலிப்படை வைத்து கொன்ற மகன்!

மனைவிக்கு தொடர்ந்து பாலியல்தொல்லை கொடுத்த தந்தை - கூலிப்படை வைத்து கொன்ற மகன்!
Published on

உத்தர பிரதேசத்தில் தன்னுடைய மனைவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த தந்தையை அவரது மகனே ஆள்வைத்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவான்(45). மண்டேத் காலன் கிராமத்தில் ஆதர்ஷ் மண்டி காவல்நிலையதுக்கு உட்பட்ட பகுதியில் பவானுக்கு சொந்தமான வயல் இருக்கிறது. கரும்பு பயிரிட்டுள்ள தனது வயலுக்கு வருகிற பிராணிகளை விரட்டுவதற்காக அவர் இரவு 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சென்றிருக்கிறார். ஆனால் வயலுக்குச் சென்ற அவர் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டதும், ரத்தவெள்ளத்தில் அவர் இறந்துகிடந்ததும் மறுநாள் காலை தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், பவானின் மகன் அமித்தான் ஆள்வைத்து அவரது தந்தையை கொலைசெய்ததைக் கண்டறிந்தனர். விசாரித்ததில் தனது மனைவிக்கு பவான் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகவும், பாலியல் உறவு வைத்துக்கொள்ளும்படி அவரை  வற்புறுத்தியதாகவும் அமித் தெரிவித்தார். மேலும் இதனால் மனமுடைந்த அமித் ரூ. 2 லட்சம் கொடுத்து இரண்டு பேரிடம் தனது தந்தையை கொலைசெய்யுமாறு கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

சொந்த தந்தையையே கொலைசெய்த குற்றத்திற்காக அமித் மற்றும் மேலும் இரண்டுபேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com