‘மின் கட்டணம் பாக்கி உள்ளது’ என மெசேஜ் அனுப்பி மோசடியில் ஈடுபட்டவர் கைது

‘மின் கட்டணம் பாக்கி உள்ளது’ என மெசேஜ் அனுப்பி மோசடியில் ஈடுபட்டவர் கைது
‘மின் கட்டணம் பாக்கி உள்ளது’ என மெசேஜ் அனுப்பி மோசடியில் ஈடுபட்டவர் கைது

‘மின் கட்டணம் பாக்கி உள்ளது’ என பொதுமக்களுக்கு மெசேஜ் அனுப்பி மோசடியில் ஈடுபட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

'உங்களின் முந்தைய மாத கரண்ட் பில் பாக்கி உள்ளது' என பொதுமக்களுக்கு பொய்யான மெசேஜ் அனுப்பி மோசடியில் ஈடுபட்ட தினேஷ் சந்த் என்ற நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 செல்போன்கள், 3 சிம் கார்டுகள், 20 டெபிட்/கிரெடிட் கார்டுகள், 4 காசோலை புத்தகங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இந்த நபர் பொதுமக்களுக்கு அனுப்பியுள்ள மெசேஜில் “அன்பான நுகர்வோர், உங்களின் முந்தைய மாத பில் பாக்கி உள்ளது. மின் கட்டணம் செலுத்தப்படாததால் இன்று இரவு உங்கள் மின்சாரம் நிறுத்தப்படும். கட்டணத்தைச் செலுத்த தயவு செய்து உடனடியாக எங்கள் மின்சார வாடிக்கையாளர் சேவை மையத்தை 8250953970 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த எண்ணை ஒருவர் தொடர்பு கொண்டபோது, 'Electricity APK' என்ற செயலியை செல்போனில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய சொல்லியிருக்கிறார். அதை செய்ததும் சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஒன்று வந்தது. அதில் அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.49,805 மற்றும் ரூ.49,645 என இரண்டு பரிவர்த்தனைகளாக பணம் எடுக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக மின்சார அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டார். அவர்கள், நாங்கள் மின் கட்டணம் தொடர்பாக எந்த தகவலும் அனுப்பவில்லை என தெரிவித்தனர். செய்வதறியாமல் திகைத்த அவர் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோசடி நபரை தேடி வந்த நிலையில் தினேஷ் சந்த் என்பவர் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: தந்தையின் உறவினரால் 19 ஆண்டுகளாக வன்கொடுமை.. கமுக்கமாக இருந்த தாய்.. உ.பி. கொடூரம்! #MeToo


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com