வரதட்சணை தராததால் தன் நண்பர்களுடன் மனைவியை பழகும்படி சொன்ன கணவர்: போலீஸில் புகார்

வரதட்சணை தராததால் தன் நண்பர்களுடன் மனைவியை பழகும்படி சொன்ன கணவர்: போலீஸில் புகார்
வரதட்சணை தராததால் தன் நண்பர்களுடன் மனைவியை பழகும்படி சொன்ன கணவர்: போலீஸில் புகார்
Published on

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் 42 வயதான அனுப்மா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2002ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு 6 மாதம் முன்பே 52 சவரன் நகை வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது. மேலும் எம்.பி.ஏ டிகிரி படிக்குமாறும், அவர்களிடமிருந்த டெக்ஸ்டைல் மில்லையும் தருமாறும் கேட்டுள்ளனர். ஆனால் அந்த பெண் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

2005ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் எம்.பி.ஏ டிகிரி படிக்காததால் தனது கணவர் தொழில் ஆரம்பிக்க லோன் வாங்கித் தருமாறு வறுபுறுத்தி இருக்கின்றனர். லோன் வாங்கி ட்ராவல் ஏஸென்ஸி ஒன்றைத் தொடங்கியுள்ளார். ஆனால் சரியாக கவனிக்காமல் போகவே தொழில் சரிவடைந்தது. அதனால் அந்த நபர் போதைப் பொருட்களிலும், சூதாட்டத்திலும் இறங்கியுள்ளார்.

மேலும், தன் மனைவியை தனது ஆண் நண்பர்களுடன் பழகுமாறு வறுபுறுத்தி இருக்கிறார். அதனால் தானும் தன் நண்பர்கள் மனைவியுடன் இருக்கலாம் என நினைத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இதைத் தொடந்து கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு அந்த நபர் சென்றுவிட்டார்.
ஊரடங்கால் ட்ராவல் கம்பெனி மேலும் நஷ்டத்தை சந்திக்கவே அந்த பெண் தன்னுடைய நகையை திருப்பித் தருமாறு தன் கணவனின் பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். அதை மறுத்த அந்த குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டே துரத்தியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியே வந்த பெண் தன் கணவர்மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com