மகளுக்கு பாலியல் வன்கொடுமை: கணவன் மீது மனைவி புகார்

மகளுக்கு பாலியல் வன்கொடுமை: கணவன் மீது மனைவி புகார்
மகளுக்கு பாலியல் வன்கொடுமை: கணவன் மீது மனைவி புகார்

தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மனைவி அளித்த புகாரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

உத்தரபிரதேச மாநிலம், மதுராவை சேர்ந்த ஒரு விதவைப் பெண் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த பெண்மணிக்கு பரத்வாஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரை திருமணம் செய்துள்ளார்.  இந்நிலையில் அந்த பெண் தனது கணவர் பரத்வாஜ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகளை பரத்வாஜ் பாலியல் வன்கொடுமைக்கு செய்ததாகவும், சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு சிறுமியை குறித்து தவறாக பதிவுசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்த நபரை கைதுசெய்துள்ள காவல்துறையினர்  3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com