காதலியின் தலையை பிளேடால் அறுத்த காதலன்: பல்லாவரம் பூங்காவில் கொடூரம்..!

காதலியின் தலையை பிளேடால் அறுத்த காதலன்: பல்லாவரம் பூங்காவில் கொடூரம்..!

காதலியின் தலையை பிளேடால் அறுத்த காதலன்: பல்லாவரம் பூங்காவில் கொடூரம்..!

சென்னை பல்லாவரத்தில் காதலனே தனது காதலியை பிளேடால் சரமாரி தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரகாஷ். ஏர் இந்தியா நிறுவனத்தில்‌ ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும் சென்னை விடுதி ஒன்றில் தங்கி பணி புரிந்து வரும் திருச்சியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலி பிற‌ ஆண் நண்பர்களுடன் பழகுவதாக சந்தேகமடைந்த சத்யபிரகாஷ் அவரை பல முறை கண்டித்திருக்கிறார். ஆனால் காதலி மீண்டும் மீண்டும் அதே தவறை செய்ததாக தெரிகிறது. இதனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்திருக்கிறது.

இந்த விவகாரம் முற்றவே ‘உன்னுடன் பேச வேண்டும். பல்லாவரம் கண்டோன்மண்ட் பூங்கா அருகே வா’ என காதலியை சத்யபிரகாஷ் அழைத்திருக்கிறார். அதன்படி காதலியும் அங்கு சென்றிருக்கிறார். அங்கு இருவரும் தங்களுக்குள்ள பிரச்னை குறித்து பேசியிருக்கின்றனர். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகரித்திருக்கிறது. வாக்குவாதத்தின் முடிவில், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் காதலியின் தலை மற்றும் முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக சத்யபிரகாஷ் அறுத்திருக்கிறார். இதனால் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் சரிந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அப்பெண்ணை பல்லாவ‌ரம் காவல் துறையினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து சத்யபிரகாஷை பல்லாவரம் காவல்துறையினர் கைது செய்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தகவல்கள்: செய்தியாளர் சாந்தகுமார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com