\
ஹைதராபாத்: காதலை ஏற்கமறுத்த பெண்ணை கோடரியால் தாக்கிய நபர் கைது

ஹைதராபாத்: காதலை ஏற்கமறுத்த பெண்ணை கோடரியால் தாக்கிய நபர் கைது

ஹைதராபாத்: காதலை ஏற்கமறுத்த பெண்ணை கோடரியால் தாக்கிய நபர் கைது
Published on

ஹைதராபாத்தில் காதலை ஏற்கமறுத்த பெண்ணை கோடரியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தின் மீர்பெட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ராகுல் என்ற நபர் ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். ஆனால் அந்த பெண் ராகுலின் காதலை வேண்டாம் என மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல், திட்டமிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அந்த பெண்ணின் வீட்டின்முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகுல், அந்தப் பெண்ணை கோடரியால் பலமாக தாக்கியிருக்கிறார். ராகுலிடமிருந்து பெண்ணை காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர் அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.

அந்த பெண் ராகுலின்மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை வைத்து ராகுல் மற்றும் அவருக்கு உதவிய இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com