இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை : போலீஸ் அதிரடி
திருப்பூரில் இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவர் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் 6 வயது பெண்குழந்தையுடம் வசித்து வருகிறார்.
இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பாற்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் 24 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாக நாடகமாடியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து அதைக்காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் வீட்டிற்கு தகவல் தெரியவர அவருக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் மாது திருமணத்தை நிறுத்துவதற்காக அந்தப் பெண்ணின் வீடியோ மற்றும் படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் அந்தப் பெண்ணிற்கு அனுப்பி மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து அந்தப் பெண் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த அந்தப் பெண்ணின் வீடியோ மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.