\
மதுரை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பணம் கேட்டு மிரட்டியதாக 2 பேர் கைது

மதுரை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பணம் கேட்டு மிரட்டியதாக 2 பேர் கைது

மதுரை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பணம் கேட்டு மிரட்டியதாக 2 பேர் கைது
Published on

மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய புகாரில் இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சந்தோஷ்குமார் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலமாக சிறுமி ஒருவருடன் பேசி பழகி வந்துள்ளார். காதலிப்பதாகக் கூறி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர், வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாகக் கூறி, 50 ஆயிரம் ரூபாய் வரை, சிறுமியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இது குறித்து அறிந்த சிறுமியின் தாய், காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, சந்தோஷ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் ராகுல் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com