சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார்.
சென்னை திருவான்மியூர் பழண்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவரின் மகள் 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை 7.30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை எதிர் வீட்டுக்காரர் செல்வராஜ்(42) என்பவர் அழைத்துள்ளார். இவர் பணத்தை காட்டி கடைக்கு சென்று வருமாறு கூறி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் வீட்டின் கதவை தாழிட்டு சிறுமியின் ஆடைகளை களைந்து தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த சிறுமியை மீட்டு செல்வராஜூக்கு தர்ம அடி கொடுத்து திருவான்மியூர் போலீசில் ஒப்படைத்தனர். இதில் செல்வராஜூக்கு தலையில் காயம் ஏற்பட்டது. செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.