சங்கரன்கோவில் அருகே கையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நபர் கைது

சேந்தமரம் பேருந்து நிறுத்தம் அருகே கையில் அரிவாளுடன் வீராப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
ரகளையில் ஈடுபட்ட நபர்
ரகளையில் ஈடுபட்ட நபர்புதிய தலைமுறை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள சேந்தமரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குலசேகரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி. இவர் சேந்தமரம் பேருந்து நிறுத்தம் அருகே கையில் அரிவாளுடன், டீக்கடையில் நின்று கொண்டிருந்த அவரின் உறவினருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ரகளையில் ஈடுபட்ட நபர்
குமரி: பரோட்டா சாப்பிட்ட போது திடீரென வந்த விக்கல் - மூச்சுத் திணறிய கொத்தனாருக்கு நேர்ந்த பரிதாபம்

பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதி என நினைக்காமல் தகாத வார்த்தைகளால் அவர் பேசியது பொதுமக்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து வேல் சாமியின் உறவினரான செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேந்தமரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேல்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இது பற்றிய வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. பட்டப்பகலில் மக்கள் அதிகமாக இருக்கும் சேந்தமரம் பேருந்து நிறுத்தம் அருகிலேயே ஒருவர் கையில் அரிவாளுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com