
ராமேஸ்வரம் அருகே மூன்று பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவாலய பங்குத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள தேவாலயத்திற்கு அப்பகுதியில் உள்ள ஏராளமானோர் பிரார்த்தனை செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில் தேவாலயத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் பிரார்த்தனைக்காக வந்துள்ளனர்.
அப்போது அங்கு பங்குத் தந்தையாக உள்ள ஜான் ராபர்ட் என்பவர் மூன்று மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகார் அடிப்படையில் தேவாலய பங்குத்தந்தை ஜான் ராபர்ட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த மண்டபம் போலீசார், அவரை போக்சோவில் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.