
சென்னை பெரம்பூரில் மூதாட்டியிடம் மிளகாய் பொடி தூவி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ்சாலையில் உள்ள ஹார்டுவேர் கடை ஒன்றில் வேலை பார்த்து வருபவர் புவனா (62). நேற்று அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் புகுந்து மூதாட்டி புவனா மீது மிளகாய் பொடி தூவி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். சத்தம் போட்டதும் அக்கம்பக்கத்தினர் துரத்திச் சென்று அந்த நபரை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர்.
தகவல் அறிந்த வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஓட்டேரியைச் சேர்ந்த ராமு என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 2 சவரன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.