Accused
Accusedpt desk

பொள்ளாச்சி: வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததாக டெய்லர் கைது – போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையம் கிராமத்தில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ரா.சிவபிரசாத்

பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக தாலுகா காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வரும் ஜே.ஜே.காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (52) என்பவரின் வீட்டை ஆய்வு செய்தனர்.

Ganja plant
Ganja plantpt desk

அப்போது அவர் தன் வீட்டின் முன்பு கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த 13 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Accused
காரைக்கால்: போலீசார் மனைவியின் தாலிச் செயினை பறித்துச் சென்றதாக இருவர் கைது

அப்போது கஞ்சா செடிகளை வளர்த்து தனது பயன்பாட்டுக்கும் மற்றவர்களுக்கும் விற்பனை செய்ய அவர் முற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com