அரியலூர்: காய்கறியுடன் கஞ்சாவை கடத்திவந்து விற்பனை செய்த நபர் கைது !

அரியலூர்: காய்கறியுடன் கஞ்சாவை கடத்திவந்து விற்பனை செய்த நபர் கைது !

அரியலூர்: காய்கறியுடன் கஞ்சாவை கடத்திவந்து விற்பனை செய்த நபர் கைது !
Published on

அரியலூரில் காய்கறியில் மறைத்து கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருதூர் கிராமத்தில் காய்கறி வியாபாரம் செய்து வரும் பூண்டு செல்வம் என்பவர் தனது வீட்டில் மறைமுகமாக கஞ்சா விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனி பிரிவு போலீசார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பூண்டு செல்வத்தை கையும் களவுமாக கைது செய்தனர்.

இதையடுத்து 2 கிலோ. 400 கிராம் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக போட்டு மருதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள இளைஞர்கள் உள்ளிட்டோர்க்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் கும்பகோணத்தில் இருந்து காய்கறி ஏற்றி வரும்போது கஞ்சாவை வாங்கி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com