\
போக்குவரத்துக்கு போலீஸுக்கு ’பளார்’: போதை இளைஞர் கைது!

போக்குவரத்துக்கு போலீஸுக்கு ’பளார்’: போதை இளைஞர் கைது!

போக்குவரத்துக்கு போலீஸுக்கு ’பளார்’: போதை இளைஞர் கைது!
Published on

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரை, கன்னத்தில் அறைந்தவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பாண்ட்ஸ் சிக்னலில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரங்கநாதன் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஒருவரை தடுத்து நிறுத்தியபோது, அவர் ரங்கநாதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

வாகனத்தின் ஆவணங்களை தர மறுத்த அவர், ரங்கநாதனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவரை போலீசார் கைது செய்தனர். அந்த நபரின் பெயர் மருதவேல் என்பது தெரிய வந்தது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com