குற்றம்
பெண் குளிப்பதை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
பெண் குளிப்பதை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை சின்னக்கண்ணு நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்ற வாலிபர். இவர் அதே பகுதியை சேர்ந்த கனிமொழி என்ற பெண் தனது வீட்டில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
வீடியோ பதிவை வைத்து அந்த பெண்ணை தன்னுடன் பேசி பழகுமாறு தொடர்ந்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டுவதாக ரமேஷ் மீது புகாரளித்துள்ளார்.
புகாரின் பேரில், பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் ரமேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.