மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த காவலாளி கைது!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த காவலாளி கைது!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த காவலாளி கைது!
Published on

தாராபுரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காவலாளியை தாராபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

தாராபுரம் அடுத்த மூலனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சானார்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி துரைசாமி. இவர் தனது மனைவி ராதாமணியுடன் வேலைக்கு சென்றிருந்தார். இதனால் இவர்களது மகள்(24) வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், இதையறிந்த அப்பகுதியில் வசித்துவரும் தனியார் நிறுவன காவலாளியான பழனிச்சாமி(50) துரைசாமியின் வீடு புகுந்து தூங்கிகொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய துரைசாமியின் மனைவி ராதாமணி தனது மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து விசாரணை செய்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை பெற்றோருடன் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வணிதாமணி, உதவி ஆய்வாளர் வேதவள்ளி ஆகியோர் சானார் பாளையம் பகுதிக்கு சென்று பழனிச்சாமியை கைது செய்து திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com