நாகர்கோவில்: மனைவியின் தங்கையை வன்கொடுமை செய்தவர் கைது!

நாகர்கோவில்: மனைவியின் தங்கையை வன்கொடுமை செய்தவர் கைது!

நாகர்கோவில்: மனைவியின் தங்கையை வன்கொடுமை செய்தவர் கைது!
Published on

நாகர்கோவிலில் மனைவியின் தங்கையை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் வடசேரி அருகுவிளை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், கோணம் வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த சகோதரிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு அக்காள் கணவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று இளம்பெண் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த அக்கா கணவர் உடல் நிலை குறித்து விசாரித்து விட்டு தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் இதை வெளியே கூறினால் உனது அக்காவை அடித்து விரட்டி விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.

பின்னர் இதையே காரணமாக வைத்து பலமுறை இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த விவரம் அறிந்து குடும்பத்தினர் விசாரித்த போதுதான் அக்காள் கணவர் தன்னை வன்கொடுமை செய்த விபரத்தைக் கூறினார்.

இதுகுறித்து தற்போது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் இளம் பெண்ணின் கணவரான வடசேரி ஆறாட்டு ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த நபர் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com