சமூக வலைதளங்களில் பெண்ணை தவறாக சித்தரித்த நபர் கைது

சமூக வலைதளங்களில் பெண்ணை தவறாக சித்தரித்த நபர் கைது

சமூக வலைதளங்களில் பெண்ணை தவறாக சித்தரித்த நபர் கைது
Published on

செங்கல்பட்டில் பெண்ணை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜரான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவர் தன்னுடைய instagram- ல் உள்ள புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக சித்தரித்து யாரோ மர்ம நபர்  Instagram மற்றும் Facebook  ஆகியவற்றில் பதிவேற்றம் செய்தது சம்மந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சிவக்குமார், காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் தீவிர விசாரனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய விருதுநகரைச் சேர்ந்த முனீஷ்வரன் (33) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com