சென்னை: சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றவர் கைது

சென்னை: சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றவர் கைது
சென்னை: சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றவர் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில தளர்வுகள் வழங்கப்பட்டன. அதில் தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மதுபானக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை. 

இந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் வாணுவம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது அங்கு 180 மிலி அளவு கொண்ட மதுபான பாட்டில்களை ரூ. 400க்கு விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து மதுபானங்களை விற்ற வாணுவம்பேட்டையை சேர்ந்த சேட்டு ராமமூர்த்தி(42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்து 112 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருக்கழுக்குன்றம், வேடந்தாங்கல் ஆகிய பகுதியில் உள்ள மதுபான கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com