ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்

ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்

ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின் தொடர்ந்து வந்த நபர் கைது செய்யப்பட்டார். 

சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிய பைக் வீராங்கனையான நிவேதா என்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்து வந்து ஆபாசமாக பேசி, செல்போனை பறிக்க முயன்றதாக நிவேதா ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் தீவிர தேடுதலில் இன்று புளியதோப்பைச் சேர்ந்த, பைக் டாக்சியில் பணிபுரிந்துவரும் சந்திரகாசன் (34) என்பவரை எண்ணூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இதுபோல் தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்வதை வாடிக்கையாக கொண்டவர் இவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவ்ரை விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com