\
சென்னை: வியாசர்பாடியில் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட நபர் கைது

சென்னை: வியாசர்பாடியில் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட நபர் கைது

சென்னை: வியாசர்பாடியில் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட நபர் கைது
Published on

சென்னையில் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடியில் தனியார் நிறுவன ஆட்டோ ஓட்டுநர், பொருள்களை ஏற்றிக்கொண்டிருந்த போது அங்கு பட்டாக்கத்தியுடன் வந்த நபர், ஆட்டோ ஓட்டுநரை வெட்டியதோடு, ஆட்டோ கண்ணாடியையும் உடைத்துள்ளார். பின்னர் அருகில் இருந்த இறைச்சிக் கடையில் உள்ள கண்ணாடியை சேதப்படுத்திய அந்த நபர், அவ்வழியாக வந்தவர்களையும் பட்டாக்கத்தி கொண்டு மிரட்டியுள்ளார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த செம்பியம் காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட நபரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பதும், அவர் மீது மேலும் சில குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com