சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய மதுரை வாலிபர் கைது

சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய மதுரை வாலிபர் கைது

சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய மதுரை வாலிபர் கைது
Published on

மதுரை திருமங்கலத்தில் சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த அருண்குமார்((29). இவர் தனது செல்போன் மூலம் சிறுமிகள் ஆபாசபடத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின்னர், சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, இதுகுறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தலைமை காவலர் கவிதா இதுகுறித்து வழக்குபதிவு செய்து அருண்குமாரை கைது செய்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அருண்குமார் மதுரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com