மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்ற 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்ற 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்ற 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
Published on

அறந்தாங்கி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 52 வயது மளிகைக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

அறந்தாங்கி அருகே மணமேல்குடி அக்ரஹாரம் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவர் முகமது ராவுத்தர். இவரது கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க 9 வயது சிறுமி அடிக்கடி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சிறுமி மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு முகமது ராவுத்தர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. கடையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய சிறுமி அழுதவாறே வந்துள்ளார். அவரிடம் சிறுமியின் தாய் விசாரித்தபோது சிறுமி தனக்கு நடந்தவைகள் குறித்து தாயிடம் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவரது தாய் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முகமது ராவுத்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com