இளைஞர் கொலை
இளைஞர் கொலைpt desk

மதுரை | முன் பகையால் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு – 3 சிறார்கள் உட்பட 6 பேர் கைது

மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மற்றும் காட்டுப்பூச்சி என்ற ஆனந்த் ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதாப் மற்றும் அவரது தம்பி (17 வயது) தரப்புக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு கோயில் திருவிழாவின் போது தங்கபாண்டியின் பைக்கை எரித்தது தொடர்பாக பிரதாப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து முன்பகை காரணமாக பிரதாப்பின் தம்பி தனது நண்பர்களுடன் மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டிற்கு தங்கபாண்டியை தேடிச் சென்றுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த தங்கபாண்டியின் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இளைஞர் கொலை
வேலூர் | அரசு பேருந்தும் ஆட்டோவும் மோதிய விபத்து - ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழப்பு

விசாரணையில், தங்கபாண்டியை கொலை செய்த மதுரை செல்லூரைச் சேர்ந்த பிரதாப்பின் காதலியான சிவப்பிரியா (18), நண்பர்களான விஷால் (எ) சகாயம் (18), அவனீந்திரன் (18) மற்றும் பிரதாப்பின் தம்பி உட்பட 3 சிறார்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர் இதையடுத்து சிவப்பிரியா, சகாயம், அவனீந்திரன் ஆகிய 3 பேரையும் மதுரை மாவட்ட 6 வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 3 சிறார்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com