மதுரை: பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக இருவர் கைது
பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகர் பகுதிகளான ஆனையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கூடல்புதூர் பகுதியில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் இரண்டு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் கொள்ளை போன வீடுகளில் கிடைத்த தடயங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் அதில், பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த விருதுநகரைச் சேர்ந்த ஐந்தரநாத் (எ) ஆனந்த் மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த ரெங்கநாதன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 பவுன் தங்க நகைகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.