மதுரை: மென்பொறியாளர் கொலையில் வடமாநில நபர் தொடர்பா?: போலீஸ் விசாரணை

மதுரை: மென்பொறியாளர் கொலையில் வடமாநில நபர் தொடர்பா?: போலீஸ் விசாரணை

மதுரை: மென்பொறியாளர் கொலையில் வடமாநில நபர் தொடர்பா?: போலீஸ் விசாரணை
Published on

மதுரையில் மென் பொறியாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை உத்தங்குடி ராம்நகர் பகுதியில் வசிப்பவர் குமரன்தாஸ் (42). திருச்சியைச் சேர்ந்த இவர், மதுரையில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

மேலும் இவர் குடும்பம் திருச்சியில் உள்ள நிலையில், மதுரை உத்தங்குடி ராம்நகர் பகுதியில் குமரன்தாஸ் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குமரன்தாஸ் மீது மர்ம நபர், கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இன்று காலை வீட்டின் வேலைக்காரர், குமரன்தாஸ் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அதோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கே.புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமையல் வேலைக்காக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை குமரன்தாஸ் அழைத்து வந்த நிலையில் அந்த வடமாநில நபர் தலைமறைவாகி உள்ளார். அது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com