தூய்மைப்பணியாளரை வீட்டை காலி செய்ய சொன்ன அவலம்; வீடு பூட்டப்பட்டதால் குழந்தையுடன் வாசலில் தஞ்சம்!

’குலம் தாழ்த்தி உயர்திச் சொல்லல் பாவம்’ - பாரதியாரின் கூற்றைப் பொய்யாக்கும் விதமாக பட்டியலின சமுதாயத்தினர் என தெரிந்ததும், வீட்டைப் பூட்டி அவர்களை குழந்தையுடன் வீதிக்கு அனுப்பிய வீட்டின் உரிமையாளர்.
முத்துப்பாண்டியின் குடும்பத்தினர்
முத்துப்பாண்டியின் குடும்பத்தினர்PT

தூய்மைப்பணியாளார் என்பதால் வீட்டை காலி செய்யச்சொல்லி துன்புறுத்தப்பட்டு வீட்டின் உரிமையாளர், அவர்களை வெளியேற்றிய சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. பூட்டிய வீட்டின் வாசலில் குழந்தையுடன் நின்ற அவலமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முத்துப்பாண்டி என்பவர் மதுரை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளாராக வேலை செய்து வரும் நிலையில், இவர்கள் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் மக்கள் இவர்கள் அருகில் வசிப்பதை விரும்பவில்லை. இவர்களுக்கு வீடு வாடகைக்கு விட்ட வீட்டின் உரிமையாளர் இவர்களை உடனடியாக வீட்டை காலி செய்ய உத்திரவிட்ட நிலையில், இவர்கள் மூன்று மாதம் அவகாசம் கேட்ட நிலையில் அவகாசம் தர மறுத்ததுடன் இவர்கள் வசித்து வந்த வீட்டை பூட்டை போட்டு பூட்டி விட்டதால், முத்துபாண்டியின் குடும்பம் வீட்டிற்கு வெளியே தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அத்துடன், அவர்களின் அன்றாட தேவைக்கான பொருட்களை கூட எடுக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து முத்துப்பாண்டியிடம் கேட்டதற்கு, ”எங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் தான் கேட்டோம். அவர்கள் தர மறுத்துவிட்டதோடு மட்டும் அல்லாமல் நாங்கள் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் உடனடியாக இடத்தை காலி செய்யசொல்லி வீட்டை பூட்டி விட்டார்கள்.

வீட்டினுள் எனது மாற்று துணிமணிகள், வங்கி அட்டை, குழந்தையின் பாட புத்தகங்கள் போன்றவை இருப்பதால், அதை எங்களால் எடுக்க முடியவில்லை. நாங்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com