\
மதுரை: 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது போக்சோ

மதுரை: 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது போக்சோ

மதுரை: 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது போக்சோ
Published on: 

மதுரையில் 17வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மதுரை அருள்தாஸ்புரம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் பாலசுப்பிரமணியன் (19). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமியை, தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியதோடு, கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் பாலசுப்பிரமணியன் ஈடுபட்டதாக கூறி, 17வயது சிறுமி மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இளைஞர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஏற்கெனவே மதுரையில் 13வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மதுரையில் சிறுமிகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com