மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கு – 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கு – 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கு – 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் தீர்ப்பு

30 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ருபாய் அபராதம் விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மதுரை கீரைத்துரை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனத்தில் 30 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக போஸ், மீனாட்சி சுந்தரம், சக்திவேல் உள்ளிட்ட 8 பேர் மீது கீரைத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட போஸ், மீனாட்சி சுந்தரம், சக்திவேல் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 லட்சம் ருபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com