சரணடைந்த 3 பேர் போலீசில் ஒப்படைப்பு
சரணடைந்த 3 பேர் போலீசில் ஒப்படைப்புpt desk

மதுரை | பாஜக முன்னாள் பெண் நிர்வாகி கொலை வழக்கு –நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேர் போலீசில் ஒப்படைப்பு

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜக முன்னாள் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவர்கள் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை விமான நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர் லட்சுமணன் வீர மரணம் அடைந்த நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் தலைமையிலான அணியினர் வந்த போது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் அப்போதைய மதுரை மத்திய தொகுதி மாநகர் பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்த சரண்யா என்பவர் அமைச்சர் கார் மீது காலனி வீசிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இப்போது அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையில், மதுரையில் இருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சரணடைந்த 3 பேர் போலீசில் ஒப்படைப்பு
அரியலூர் | அடகு கடையில் 250 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி திருட்டு – வடமாநில இளைஞர் மீது புகார்

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குடும்பம் மற்றும் சொத்துப்பிரச்னை காரணமாக கொலை நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் சரண்யாவின் 2ஆவது கணவரான பாலன் என்பவரின் முதல் மனைவியின் மகன் கபிலன், அவரது நண்பர்களான பார்த்திபன் மற்றும் குகன் ஆகிய மூன்று பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கபிலனுக்கு சொத்துக்களை வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கபிலன், குகன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் சரண்யாவின் தலையை துண்டித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண்டரான நிலையில், குற்றச்சம்பவம் நடைபெற்ற அந்தந்த சரகத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் சரண்டராக வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்ற உத்தரவு இருப்பதால் மூவரின் சரண்டரையும் நீதிமன்றம் ஏற்க மறுத்து மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சரணடைந்த 3 பேர் போலீசில் ஒப்படைப்பு
திண்டுக்கல் | இருசக்கர வாகனத்தின் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்து - கூலித் தொழிலாளி பலி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com