மதுரை விமான நிலையத்தில் போலி ஐபிஎஸ் அதிகாரி கைது

மதுரை விமான நிலையத்தில் போலி ஐபிஎஸ் அதிகாரி கைது

மதுரை விமான நிலையத்தில் போலி ஐபிஎஸ் அதிகாரி கைது
Published on

மதுரை விமான நிலையத்தில் போலி ஐபிஎஸ் அதிகாரியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் இதயதுல்லா. இவர் தனது நண்பரை வரவேற்க மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை சென்றுள்ளார். அப்போது தன்னை ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறிய அவர், விமான நிலையதிற்கு உள்ளே செல்ல அனுமதிக்குமாறு தொழில் பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்துள்ளார். தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதற்கான ஒரு அடையாள அட்டையையும் காட்டியுள்ளார். அப்போய்ஹு ராஜேஷ்குமார் என்ற பெயரில் இருந்த அந்த அடையாள அட்டை போலியானது என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்த இதயதுல்லாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com