\
சொத்துக்காக தாயை கொலை செய்த மகள்-மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்த மதுரை மாவட்ட நீதிமன்றம்

சொத்துக்காக தாயை கொலை செய்த மகள்-மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்த மதுரை மாவட்ட நீதிமன்றம்

சொத்துக்காக தாயை கொலை செய்த மகள்-மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்த மதுரை மாவட்ட நீதிமன்றம்
Published on: 

மதுரையில் சொத்துக்காக தாயை கொலை செய்த மகள் மற்றும் மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாநகர் புதூர் பகுதியை சேர்ந்த பாப்பம்மாள் என்ற மூதாட்டியை சொத்திற்காக அவரது மகள் நாகேஸ்வரி மற்றும் நாகேஸ்வரியின் கணவர் (மருமகன்) முனியாண்டி ஆகிய இருவர் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக புதூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கின் முடிவில், நாகேஸ்வரி - முனியாண்டி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்து இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com