\
மதுரை: பள்ளி மாணவியை கடத்தியதாக இளைஞர் போக்சோவில் கைது

மதுரை: பள்ளி மாணவியை கடத்தியதாக இளைஞர் போக்சோவில் கைது

மதுரை: பள்ளி மாணவியை கடத்தியதாக இளைஞர் போக்சோவில் கைது
Published on

மதுரையில் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு பள்ளி மாணவி கடந்த புதன் கிழமை காணாமல் போனதாக சிறுமியின் தாயார் கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தினர். இந்நிலையில் பள்ளி மாணவி நேற்று காலை மீட்கப்பட்டார்.

இதனையடுத்து மாணவியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை பெத்தானியாபுரம் என்.எஸ்.பி வீதியைச் சேர்ந்த கார்த்திக் பாண்டியன் என்பவர் காதலிப்பதாகக் கூறி தன்னை அழைத்துச் சென்றார். பின்னர் இரவு முழுவதும் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த நிலையில் காவல்துறையினருக்கு பயந்து மீண்டும் வீட்டிற்கு அருகிலயே இறக்கிவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து 8ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்றதாக கார்த்திக் பாண்டியன் மீது மதுரை மாநகர தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com