மதுரை: ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு ஆய்வாளரை தாக்கியதாக இளைஞர் கைது

மதுரை: ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு ஆய்வாளரை தாக்கியதாக இளைஞர் கைது

மதுரை: ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு ஆய்வாளரை தாக்கியதாக இளைஞர் கைது

மதுரையில் சாலையை மறித்து நின்றிருந்தவர்களை கலைந்து செல்லச் சொன்ன காவல் நிலைய சார்பு ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மதுரை திருப்பாலை பகுதியில் கடந்த சில நாட்களாகவே திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் திருப்பாலை காவல்துறை சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு சாலையை மறித்து இருசக்கர வாகனத்தில் பேசிக்கொண்டிருந்த நபர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்.

இந்நிலையில், காவல் சார்பு ஆய்வாளர் கூறியும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் இளைஞர் முத்துக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு, தான் சட்டக்கல்லூரி மாணவர் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், காவல் சார்பு ஆய்வாளருக்கும், இளைஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இளைஞர் முத்துக்குமார் கையில் வைத்திருந்த பைக் சாவியால் சார்பு ஆய்வாளரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலை காவல் துறையினர் இளைஞர் முத்துக்குமாரை கைது செய்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com