மதுரை: இழப்பீடு தொகை பெற்றுத்தருவதாக பெண்ணிடம் மோசடி - போலி அதிகாரி கைது

மதுரை: இழப்பீடு தொகை பெற்றுத்தருவதாக பெண்ணிடம் மோசடி - போலி அதிகாரி கைது
மதுரை: இழப்பீடு தொகை பெற்றுத்தருவதாக பெண்ணிடம் மோசடி - போலி அதிகாரி கைது

அரசு அதிகாரி எனக்கூறி இறந்த நபருக்கு இழப்பீடு பெற்றுத்தருவதாக பெண்ணிடம் பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வசித்துவரும் தமிழ்செல்வி என்பவரின் மகன் கடந்தாண்டு பாம்பு கடித்து இறந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வியை வீட்டிற்கு வந்து சந்தித்த நபர், தான் ஒரு அரசு அதிகாரி எனவும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறையில் பணிபுரிந்து வருவதாகவும், பாம்பு கடித்து இறந்த சிறுவனுக்கு தமிழக அரசு இழப்பீடு தொகை 8 லட்ச ரூபாயை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் எனவும் கூறி 6 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து இழப்பீட்டுத்தொகை குறித்து அந்த நபரிடம் கேட்டபோது தொலைபேசியை எடுக்காமல் திட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த தமிழ்செல்வி இது குறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று விசாரித்ததில் அவர், சேலத்தை சேர்ந்த 40 வயதான பிரபாகரன் என்பதும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் நிவாரணத் தொகையை பெற்று தருவதாகக் கூறி பல்வேறு இடங்களில் பணத்தை நூதனமாக பெற்று மோசடி செய்யும் வழக்கம் உடையவர் என தெரியவந்தது.

இதனையடுத்து, பிரபாகரனை கைது செய்த சோழவந்தான் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com