மதுரை: திருமணம் செய்து ஏமாற்றியதாக இளைஞர் வீட்டின்முன் தாலிகயிற்றுடன் போராடும் திருநங்கை!

மதுரை: திருமணம் செய்து ஏமாற்றியதாக இளைஞர் வீட்டின்முன் தாலிகயிற்றுடன் போராடும் திருநங்கை!
மதுரை: திருமணம் செய்து ஏமாற்றியதாக இளைஞர் வீட்டின்முன் தாலிகயிற்றுடன் போராடும் திருநங்கை!

மதுரையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்ததாதாக கூறி இளைஞரின் வீட்டின் முன்பாக தாலிக்கயிறுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கோவில் பூசாரி திருநங்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு கீழச்சின்னனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநிதி(33). இவர் அப்பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவிலில் பூசாரியாக இருந்துவந்துள்ளார். மேலும் அவ்வப்போது அப்பகுதி பொதுமக்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக கோவிலுக்கு வந்த மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் பகுதியை சேர்ந்த தங்கதுரை (33) என்பவருக்கும் கோவில் பூசாரியான திருநங்கை ஸ்ரீநிதிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருநங்கை ஸ்ரீநிதியுடன் சேர்ந்து தங்கதுரை கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். மேலும் கோவில்ஸ்ரீநிதிக்கு தங்கதுரை தாலி கட்டி திருமணம் செய்து வீடு ஒன்றில் இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் உறவு தங்கதுரை குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், தங்கதுரை மற்றும் திருநங்கை ஸ்ரீநதியுன் நட்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குடும்பத்தார் தங்கதுரைக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.

இந்நிலையில் தங்கதுரை பெற்றோரின் அழுத்தத்திற்காக தான் திருமணம் செய்துகொள்வதாகவும், வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் முடித்தபின் ஒரு மாதத்தில் உன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதாகவும் ஸ்ரீநிதியிடம் கூறியிருக்கிறார். இதற்கு திருநங்கை ஸ்ரீநிதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தங்கதுரைக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. பிறகு திருநங்கை ஸ்ரீநிதி தங்கதுரையைத் தொடர்பு கொண்டபோது செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். தொடர்ந்து பல முறை பேச முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் ஒரு மாதமாக ஏமாற்றி வந்துள்ளார்.

ஒரு மாதம் கடந்த பின்னர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிய இன்றைய தினம் கையில் தாலியுடன் வந்து தங்கதுரையின் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீநிதி. இளைஞர் தங்கதுரை தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தங்கதுரை வந்தால் மட்டுமே தான் நான் செல்வேன் என கூறி திருநங்கை ஸ்ரீநிதி போராட்டம் நடத்திய நிலையில், அங்கு வந்த பாலமேடு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அனுப்பி வைத்தனர்.

முன்னதாக பாலமேடு காவல்நிலையத்தில் திருநங்கை ஸ்ரீநிதி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 22 ஆம் தேதியன்று இளைஞர் தங்கதுரை மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பாலமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கதுரையை தேடி வருவதும் குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com