மதுரை: மதுபோதையில் அரிவாளுடன் சாலையில் அட்டூழியம் செய்த கும்பல் - பதைபதைக்கும் வீடியோ

மதுரை: மதுபோதையில் அரிவாளுடன் சாலையில் அட்டூழியம் செய்த கும்பல் - பதைபதைக்கும் வீடியோ
மதுரை: மதுபோதையில் அரிவாளுடன் சாலையில் அட்டூழியம் செய்த கும்பல் -  பதைபதைக்கும் வீடியோ

மதுரையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அண்ணன் தம்பியை 8 பேர் கொண்ட போதை கும்பல் வெட்டியதோடு, சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த அண்ணன், தம்பியான திருமன், அழகுராஜா கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை வலையங்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தேநீர் கடை முன்பு இருவரும் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது வலையங்குளம் பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பல் மது மற்றும் கஞ்சா போதையில் சாலையை மறித்து வாகனங்களை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட சகோதரர்கள் மற்ற வாகனங்கள் செல்ல வழி விடுமாறு கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு கஞ்சா மற்றும் மது போதையில் திருமன், அழகுராஜா ஆகிய இருவரையும் பட்டாகத்தி, அரிவாள் மற்றும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி காயப்படுத்தினர்.

மேலும் அந்த 8 பேர் கொண்ட போதை கும்பல் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களை தங்களது ஆயுதங்களால் அடித்து உடைத்தனர். மேலும் பட்டப்பகலில் கையில் அரிவாள், பட்டாகத்தி மற்றும் வால் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன நடந்து செல்லும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் பெருங்குடி ஆய்வாளர் லெஷ்மி லதா ஆகியோர் பார்வையிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போதையில் வந்த கும்பல் சகோதரர்களை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை: மதுபோதையில் இருசக்கர வாகனங்களை அடித்து உடைக்கும் இளைஞர்கள் #Madurai | #Violence pic.twitter.com/sbLzQSLocJ
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 16, 2022

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com