மதுரை: 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபருக்கு தர்மஅடி..!
மதுரையில் 12 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கரடிபட்டியை சேர்ந்தவர் காசி (27). டிரைவராக வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, நேற்று இரவு வீட்டின் முன்பு இந்த டிரை சைக்கிளில் அமர்ந்து தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது மதுபோதையில் வந்த காசி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை டிரைசைக்கிளோடு சேர்த்து கீழக்குயில்குடி மலைப் பகுதிக்கு கொண்டு செல்லும் போது, சிறுமியின் தம்பி வண்டியில் இருந்து கீழே குதித்து தப்பி ஒடி இது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினரோடு விரைந்து சென்ற சிறுமியின் பெற்றோர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சித்துக் கொண்டிருந்த காசியை பிடித்து பொதுமக்களுடன் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து காசியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.