`கள்ளக்குறிச்சி மாணவியை ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதற்கு ஆதாரமில்லை’- உயர்நீதிமன்றம்

`கள்ளக்குறிச்சி மாணவியை ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதற்கு ஆதாரமில்லை’- உயர்நீதிமன்றம்

`கள்ளக்குறிச்சி மாணவியை ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதற்கு ஆதாரமில்லை’- உயர்நீதிமன்றம்
Published on

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருக்க சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

கனியாமூர் பள்ளி ஜூலை 13ம் தேதி மர்ம மரணம் அடைந்தது குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்ன சேலம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை ஜூலை 17ஆம் தேதி கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான 5 பேரும் ஜாமீன் கோரிய மனுக்கள் விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு ஆக.26-ம் தேதி விசாரணைக்கு வந்தன.

அப்போது மாணவியின் பெற்றோர் தரப்பு, சிபிசிஐடி காவல்துறை தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு, விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அப்போது சிபிசிஐடி தரப்பில் குறுக்கிட்டு, கடுமையான நிபந்தனைகள் விதிக்க வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் விரிவான விவரங்கள், இன்று (ஆக.29) வெளியானது.

அதில், `மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து, பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். `மாணவியை நன்கு படிக்க வேண்டும்’ என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது. வேதனையானதும்கூட.

நன்றாக படிக்க வேண்டும் என்று மாணாக்கருக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியப் பணியின் ஒரு அங்கம். மாணவியை ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. அதேநேரம் படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவிக்கிறது. இவ்வழக்கில் ஜாமீன் பெற்ற ஐவரும், சேலம் மற்றும் மதுரையில் நான்கு வாரம் தினமும் இரு முறை ஆஜராக வேண்டும். அதன்பின்னர் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com