நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதாக பிரபல படத் தயாரிப்பாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதாக பிரபல படத் தயாரிப்பாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதாக பிரபல படத் தயாரிப்பாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
Published on

நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதாக  பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு படங்களை தயாரிப்பதற்காக, வி. ரவிச்சந்திரன் , இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 97 கோடி  ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடனை அவர் திருப்பி செலுத்தாத நிலையில் கடனுக்காக அடமானம் வைத்த அவரது சொத்தை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்தது.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, மனுதாரருக்கு பல முறை வாய்ப்பு கொடுத்தும் அவர் கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என்றும், மேலும் உயர்நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்கார் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரவிச்சந்திரன், உயர்நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தி வந்துள்ளார் என குறிப்பிட்ட நீதிபதிகள், ரவிச்சந்திரனுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com