‘இன்ஸ்டாவில் என்னைவிட அதிக Followers-ஆ?’ - பொறாமையில் குழந்தைகள் கண்முன்னே மனைவியை கொன்ற கணவன்!

வாக்குவாதத்தில், குழந்தைகளின் கண்முன்னே தன் மனைவியை கொலை செய்திருக்கிறார் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர்.
குற்றம்
குற்றம்PT

உத்தரபிரதேசத்தில் லக்னோவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தன்னைவிட தனது மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோயர்ஸை கொண்டிருந்ததால் பொறாமையில் தங்கள் குழந்தைகளின் கண் எதிரே, மனைவியை கொலை செய்துள்ளார். இது அப்பகுதியில் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சொந்தமாக டிராவல் ஏஜென்ஸியை ஒன்றை நடத்தி வந்துள்ளார். திருமணமாகி 15 வருடங்களான இவருக்கு 12 வயதில் மகளும், ஐந்து வயதில் ஒரு மகனும் உண்டு. இவரின் மனைவி இல்லத்தரசி. இல்லத்தரசியான அப்பெண், தன்னுடைய பொழுதுபோக்காக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியுள்ளார். அதில் அடிக்கடி ஏதேனும் பதிவேற்றி வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

இவரின் பதிவுகள் பிரபலமடைந்துள்ளது. ஒருகட்டத்தில் தொழிலதிபரின் இன்ஸ்டாகிராமை தொடர்பவர்களின் எண்ணிக்கையை விட அவரது மனைவியின் பதிவை தொடரும் நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது.

இதுவே ஒரு கட்டத்தில் அவருக்கு மனைவி மீது பொறாமையும், அதிருப்தியும் ஏற்பட காரணமாய் இருந்துள்ளது. இது குறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாறும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மனைவி, தன் கணவரின் சந்தேகத்தை தவிர்ப்பதற்காக, தனது இன்ஸ்டாகிராமில் கணவரின் பக்கத்தை ப்ளாக் செய்துள்ளார். மனைவியின் இச்செயல் தொழிலதிபருக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுகிழமை) காலை அந்த தொழிலதிபர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் ரேபரேலி என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ரேபரேலிக்கு செல்வதற்கு பதிலாக கார், வேறு பாதையில் திரும்பி பூர்வாஞ்சல் சாலையில் கார் பயணித்திருக்கிறது. சுல்தான்பூர் என்ற கிராமத்தை கடக்கையில் காரை நிறுத்திய தொழிலதிபர் தனது மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

கொலை
கொலைfile image
குற்றம்
கொல்கத்தா: ராகிங் கொடுமையால் மாணவர் எடுத்த விபரீத முடிவு

மனைவியினுடனான வாக்குவாதத்தில், பெற்ற குழந்தைகளின் கண்முன்னே தன் மனைவியின் கழுத்தை நெறித்திருக்கிறார் அவர். இதை பார்த்த குழந்தைகள், அப்பாவை தடுத்தும் கண்ணீர் விட்டு கதறியும் உள்ளனர். ஆனால் அவர் கொடூரமாக குழந்தைகளின் கண் முன்னேயே தன் மனைவியை கொலை செய்துள்ளார்.

பின்னர் காரின் கதவை பூட்டிக்கொண்டு மூவரும் காரின் உள்ளேயே அமர்ந்திருந்த நிலையில், அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் நிற்பதைக்கண்டு அருகில் சென்று விசாரித்துள்ளனர். போலீசாரிடம் குழந்தைகள் அழுதுகொண்டே நடந்தது அனைத்தையும் தெரிவித்தனர். குழந்தைகளின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தொழிலதிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com