குற்றம்
அரசுப்பள்ளி மாணவிக்கு 'லவ் டார்ச்சர்' - இளைஞர் உட்பட இருவர் போக்சோவில் கைது
அரசுப்பள்ளி மாணவிக்கு 'லவ் டார்ச்சர்' - இளைஞர் உட்பட இருவர் போக்சோவில் கைது
10 ஆம் வகுப்பு மாணவிக்கு 'லவ் டார்ச்சர்' கொடுத்ததாக இளைஞர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பெரப்பேரியைச் சேர்ந்த 16 வயது மாணவி மகேந்திரவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடைய மகன் திலகு (19) என்ற இளைஞர், பள்ளி மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகாரை அடுத்து காவல் ஆய்வாளர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த திலகு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் செல்வராஜ் (24) ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.