குற்றம்
லாட்டரி சீட்டு விற்பனை: தேமுதிக நிர்வாகி உட்பட இருவர் கைது
லாட்டரி சீட்டு விற்பனை: தேமுதிக நிர்வாகி உட்பட இருவர் கைது
சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தேமுதிக நிர்வாகி உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் மண்ணடியில் உள்ள விடுதி ஒன்றில் சட்ட விரோதமாக ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக வடக்கு கடற்கரை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் பேரில் அங்கு ஆய்வு செய்த காவல்துறையினர், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த தேமுதிக வட்டச் செயலாளர் ஆண்ட்ரூஸ் என்ற ரவிச்சந்திரன், அவரது நண்பர் ஜீவா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.