லோன் ஆப் மோசடி: 4 செயலிகளை நடத்திய சீனாவைச் சேர்ந்தவர் கைது!

லோன் ஆப் மோசடி: 4 செயலிகளை நடத்திய சீனாவைச் சேர்ந்தவர் கைது!

லோன் ஆப் மோசடி: 4 செயலிகளை நடத்திய சீனாவைச் சேர்ந்தவர் கைது!

லோன் ஆப் மோசடியில் சீனாவைச் சேர்ந்த நபர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்

லோன் ஆப்களில் விரைவாக கடன் வழங்கப்படுகிறது, ஆனால் கடனை திருப்பிச் செலுத்தும்போது கடுமையாக துன்புறுத்துவதாக பல வழக்குகள் பதிவானதை அடுத்து காவல்துறை தனது விசாரணையைத் தொடங்கியது. இதனடிப்படையில் 27 வயதான சீன நாட்டை சேர்ந்த நபர் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். போலீஸ் தரப்பில், இவர் நான்கு நிறுவனங்களால் நடத்தப்படும் லோன் ஆப்களின் ஒட்டுமொத்த தலைவராக இருந்தார் என தெரிவித்தனர். மேலும் லோன் ஆப் கால் சென்டர்களின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்த ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையம், அங்கீகரிக்கப்படாத லோன் ஆப்கள் மற்றும் கடன் வாங்குபவர்களை துன்புறுத்துவது தொடர்பான 27 வழக்குகளை விசாரித்து வருகிறது. நிதி பரிவர்த்தனைகள் குறித்த முதற்கட்ட விசாரணையில் இதுவரை சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு சீன நாட்டவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 22ம் தேதி, குரியான், ஹரியானா மற்றும் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஐந்து கால் சென்டர்களில் 11 பேரை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.

லோன் ஆப் துன்புறுத்தல்களால் ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட மூன்று தற்கொலை வழக்குகள் கடந்த ஒரு மாதத்தில் பதிவாகிய பின்னர் லோன் ஆப்கள் மீதான ஒடுக்குமுறை தொடங்கியது. அந்த பொறியாளார் சில மாதங்களுக்கு முன்பு 8 லட்சம் வாங்கியக்கடனை, மீண்டும் 11 லட்சமாக திரும்ப செலுத்த துன்புறுத்தப்பட்டுள்ளார், இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தெரிவித்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com